செய்திகள் :

அமித் ஷா வருகை: 2 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை

post image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி ராணிப்பேட்டையில் இன்றும்(மார்ச். 6) நாளையும்(மார்ச். 7) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கபட்டுள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆவதையொட்டி, மாா்ச் 7-ஆம் தேதி சிஐஎஸ்எஃப் உதய தினம் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் மண்டல பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று கடற்கரை சைக்கிள் பேரணியை தொடக்கி வைக்கிறார்.

குஜராத் மாநிலம், லக்பத் கோட்டை மற்றும் மேற்குவங்க மாநிலம் பக்காளி கடற்கரையிலிருந்து இரு பிரிவுகளாக இந்த சைக்கிள் பேரணி தொடங்குகிறது.

இதையும் படிக்க: மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை: பாஜக அறிவிப்பு!

‘பாதுகாப்பான கடல் வளம், செழிப்பான இந்தியா’ என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இப்பேரணியில், 14 பெண் வீரா்கள் உள்பட 125 வீரா்கள் பங்கேற்கின்றனா்.

11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6,553 கிலோமீட்டா் தூரத்தை 25 நாள்களில் கடந்து, மாா்ச் 31-ஆம் தேதியன்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவிடத்தில் வந்து பேரணியை நிறைவுசெய்ய உள்ளனர்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையையொட்டி ராணிப்பேட்டையில் மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் ட்ரோகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்

திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் நடந்... மேலும் பார்க்க

மக்காச்சோள வர்த்தகத்துக்கு 1% சந்தைக்கட்டணம் விலக்கு!

தமிழ்நாட்டில் மக்காச்சோள வர்த்தகம் மேற்கொள்ள தற்போதுள்ள ஒரு சதவீத சந்தைக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.இது குறித்து தமிழக அரசின் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் வெ... மேலும் பார்க்க

கை ரிக்‌ஷாவைப்போல சாதியும் ஒழிக்கப்பட வேண்டும்: நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவுகள் வெறும் காகிதளவில் மட்டுமே இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து அந்த சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்... மேலும் பார்க்க

2024-ல் குற்ற வழக்குகள் குறைவு: தமிழக அரசு

சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான வழக்குகள் 2024ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:கடந்த 2024ம் ஆண்டிற்கான ... மேலும் பார்க்க

தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் உருவாக்கம்!

தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் (மரகத பூஞ்சோலைகள்) உருவாக்கப்படவுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:வனத்துறை அமைச்சரால் 100 மரகதப்பூஞ்சோலைகள் (கிராம மரப்பூங்காக்கள்)... மேலும் பார்க்க

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா!

திருச்சி: புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா வெகு வி... மேலும் பார்க்க