செய்திகள் :

Chandrababu Naidu: ``மூன்று மொழிகளையல்ல பல மொழிகளை ஊக்குவிப்பேன்'' - சந்திரபாபு நாயுடு

post image

மும்மொழிக் கொள்கையைத் தமிழக ஆளும் திமுக அரசு, இந்தித் திணிப்பு என்று அரசியலாக்கி தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதாகவும், ஏற்காவிட்டால் கல்விக்கு இரண்டாயிரம் கோடி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என்றும் மத்திய பாஜக அரசு கூறிவிட்டது. மறுபக்கம், இந்தி புகுத்தப்பட்ட மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தி பிரதானமாக்கப்பட்டிருக்கிறது. அதையேதான் தமிழ் நாட்டிலும் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் செய்கிறார்கள் என்று திமுக கூறிவருகிறது. அதைவிட, மீண்டும் ஒரு மொழிப்போரைத் தூண்ட வேண்டாம் என்று மத்திய பாஜக அரசுக்குத் திமுக கண்டனம் தெரிவித்துவருகிறது.

இவ்வாறான சூழலில், மத்திய பாஜக அரசின் முக்கிய கூட்டணிக் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, தமிழர்கள் நிறைய பேர் ஆங்கிலம் கற்றுக்கொண்டு அமெரிக்கா சென்று சிறப்பாகச் செயல்படுவதாகவும், கூகுள் தலைமை அதிகாரிகூட ஒரு தமிழர்தான் எனவும் புகழ்ந்திருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய சந்திரபாபு நாயுடு, ``தமிழ்நாட்டிலிருந்து நிறைய பேர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கின்றனர். அங்கு நிறைய பேர் தமிழர்களாக இருக்கின்றனர். ஆங்கிலம் கற்றுக்கொண்டு சிறப்பாகச் செயல்படுகின்றனர். கூகுள் தலைமைச் செயல் அதிகாரியைப் (CEO) பாருங்கள். பெரும்பாலான நிறுவனங்களில் முதல் இரு தலைமை அதிகாரிகளில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருப்பார்." என்று கூறினார்.

சந்திரபாபு நாயுடு

அதேசமயம், இந்தியையும் படிக்க வேண்டும் என்று கூறிய சந்திரபாபு நாயுடு, ``அறிவு என்பது வேறு, மொழி என்பது வேறு. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், சர்வதேச மொழிகள் உட்பட 10 மொழிகளை நான் ஊக்குவிக்கவிருக்கிறேன். மூன்று மொழிகளையல்ல பல மொழிகளை ஊக்குவிப்பேன். நாங்கள் தெலுங்கை ஊக்குவிக்க வேண்டும். வாழ்வாதாரத்திற்கான சர்வதேச மொழி ஆங்கிலம் என்பதால் அதையும் ஊக்குவிக்க வேண்டும். அதோடு, இந்தி கற்றுக்கொள்வது நல்லது. இதன்மூலம் மக்களுடன் நாம் எளிதில் பழக முடியும்." என்று கூறினார்.

கரூர்: `காலை முதல் இரவு வரை!' - செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற 12 மணி நேர சோதனை

தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில், அமைச்சருக்கு நெருங்கிய நண்பர்களான கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணியின் ராயனூர் வீடு, ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: தனியார் மதுபான ஆலையில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை

தமிழக முழுவதும் அமலாக்கத் துறையினர் மதுபான ஆலை மற்றும் முக்கிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவடடத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் 20 - க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் சிக்கியிருக்க பைடனின் அரசியல் காரணமா... துணை வீரர் சென்னதென்ன?

நீண்ட நாள்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பாததற்கு அரசியலே காரணம் என்ற எலான் மஸ்க்கின் கருத்து சரியானது என்று வழிமொழிந்துள்ளார், விண்வெளி நிலையத்... மேலும் பார்க்க

விருதுநகர்: அதிமுக பொதுக்கூட்டம்; மேடையில் கட்சித் தொண்டரைத் தாக்கிய முன்னாள் அமைச்சர்!

விருதுநகரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் உள்பட அ.தி.ம... மேலும் பார்க்க

`அறிஞர் அண்ணாவிடமிருந்த நேர்மை மு.க.ஸ்டாலினிடம் இல்லை...' - சொல்கிறார் இராம.ஸ்ரீநிவாசன்

புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் தலைமையில் மதுரையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இராம ஸ்ரீநிவாசன், "புதிய கல்விக் கொள்கை மூலமா... மேலும் பார்க்க

தெலங்கானா: மத அடையாளங்களை அகற்றக் கூறி மாணவர்களை தாக்கிய பள்ளி முதல்வர் - கொதித்தெழுந்த பெற்றோர்கள்!

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள கோண்டோர் ஷைன் பள்ளியில் நடந்த ஒரு சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் முதல்வர் லட்சுமய்யா, மாணவர்கள் நெற்றியில் பொட்டு வைத்திருந்ததைக் கண்டி... மேலும் பார்க்க