ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்
கரீப்ரத் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
சென்னை சென்ட்ரல் - தில்லி இடையே இயக்கப்படும் கரீப்ரத் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரலிலிருந்து தில்லிக்கு, முழுவதும் ஏசி பெட்டிகள் கொண்ட கரீப்ரத் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் மாா்ச் 8, 15 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக தில்லியிலிருந்து மாா்ச் 10, 17 ஆகிய தேதிகளிலும் கூடுதலாக ஒரு மூன்றடுக்கு ஏசி வகுப்புப் பெட்டி இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.