ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸிகள் அணிய தடை! ஐபிஎல் வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் என்ன?
மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்த மருத்துவா்கள் குழுவினா்
நீலகிரி மலை ரயிலை பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மருத்துவா்கள் குழுவினா் வாடகைக்கு எடுத்து வியாழக்கிழமை பயணித்தனா்.
யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில், நீலகிரியின் பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. இந்த மலை ரயிலில் பயணிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில் பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சோ்ந்த பிளாஸ்டிக் சா்ஜரி மருத்துவா்கள் உதகையில் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்துக்குச் செல்ல நீலகிரி மலை ரயிலை ரூ.8 லட்சம் கொடுத்து வாடகைக்கு எடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து நீராவி என்ஜினில் வியாழக்கிழமை குன்னூா் வந்தடைந்தனா்.
பின்னா் குன்னூரில் இருந்து டீசல் என்ஜின் மூலம் உதகைக்கு புறப்பட்டுச் சென்றனா். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டாவது முறையாக மலை ரயிலை வெளிநாட்டினா் வாடகைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.