குடியரசுத் துணைத்தலைவருக்கு நெஞ்சு வலி! எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
குடியிருப்புப் பகுதியில் உலவிய காட்டெருமை: மக்கள் அச்சம்
உதகை, கீழ்கோடப்பமந்து குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை உலவிய காட்டெருமையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்ட வனத்தில் இருந்து வெளியேறும் விலங்குகள் உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், உதகை, கீழ்கோடப்பமந்து குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை ஒற்றைக் காட்டெருமை உலவியது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்ததுடன், வீட்டுக்குள் முடங்கினா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி காட்டெருமையை வனப் பகுதிக்குள் விரட்டினா்.