ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!
திமுக எம்.பி. தயாநிதி மாறனின் வெற்றியை உறுதிப்படுத்திய சென்னை உயர்நீதிமன்றம்!
மத்திய சென்னை தொகுதியில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்தாண்டு மக்களவைத் தேர்தலின்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூறி, திமுக எம்.பி. தயாநிதி மாறனின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்குரைஞர் எம்.எல். ரவி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட வழக்குரைஞர் எம்.எல். ரவி, தயாநிதி மாறனுக்கு எதிரான மனுவில் கூறியதாவது, மக்களவைத் தேர்தல் பிரசாரம் ஏப். 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ஏப். 19 ஆம் தேதியிலும் பத்திரிகை வாயிலாக விளம்பரம் வெளியிட்டு, தயாநிதி மாறன் பிரசாரம் மேற்கொண்டார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது.
அதுமட்டுமின்றி தேர்தலுக்கான பிரசாரச் செலவு, விளம்பரச் செலவு, பூத் ஏஜென்டுகளுக்காக செலவிடப்பட்டது குறித்து தயாநிதி மாறன் தெரிவிக்கவில்லை. மேலும், அவர் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ரூ. 95 லட்சத்தைவிட அதிகம் செலவு செய்துள்ளார்.
இதையும் படிக்க:எந்த மாநிலத்தைவிட நாங்கள் பின்தங்கியிருக்கிறோம்?: முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
இதன்மூலம், மத்திய சென்னை தொகுதியில் நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறவில்லை என்பதால், தேர்தல் செல்லாது என்று அறிவித்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், ``தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்தக் காரணங்களும் இல்லை’’ எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தார். இதன் மூலம் தயாநிதி மாறனின் வெற்றி செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.