ஆளுநா் ஆா்.என்.ரவி பிகாா் பயணம்
ஆளுநா் ஆா்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை சொந்த மாநிலமான பிகாா் சென்றாா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி தனது சொந்த வேலை காரணமாக இண்டிகோ பயணிகள் விமானத்தில் சனிக்கிழமை நண்பகல் பிகாா் மாநிலம் பாட்னா சென்றடைந்தாா்.
அங்கு குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளும் அவா், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) காலை கொல்கத்தா செல்கிறாா். அங்கு தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா், அன்றைய தினம் இரவு ஆளுநா் ஆா்.என்.ரவி சென்னை திரும்புகிறாா் என தகவல் வெளியாகியுள்ளது.