செய்திகள் :

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்

post image

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலாகதான் கற்க வேண்டும் என்பதைதான், புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. தமிழகத்தில் தமிழில் கல்வி கற்பது அனேகமான இடங்களில் மறைந்து வருகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றால் புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும்.

அதில் மும்மொழிக் கொள்கை என்று வரும் போது அதில் மூன்றாவது மொழியாக, எந்த மொழியில் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம். புதிய தேசிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது. இந்தி திணிக்கப்படவில்லை என்பது உண்மையான விஷயம், அதற்காக போராட்டம் நடத்தப்பட வேண்டி இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இரண்டாவது தொகுதி வரையறை என்பது தமிழகத்தில் இருக்கிற 39 தொகுதிகளுக்கு குறைவாக அந்த வரைமுறை இருக்காது என்பதை மத்திய கல்வித்துறை அமைச்சர் அனைத்தும், தெளிவுபடுத்துகிறார். அதனால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அரசியல் செய்வதை என்பது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது, அந்த வகையில் இதுவும் ஒன்று. புதிய தேசிய கல்விக் கொள்கை என்று எடுத்துக் கொண்டால் அது தமிழகத்திற்கு மட்டும் வருவது இல்லை. அனைத்து மாநிலத்திற்கும் வரக் கூடிய ஒன்று.

பிகாரில் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக தமிழ் கற்றுக் கொடுக்கப்படும். ஆனால் அவர்கள் மீது தமிழை திணைக்க முடியாது. நாம் எப்படி இந்தியை திணிக்க கூடாது என்று கூறுகிறோமோ. அதே போல மற்ற மாநிலத்தவர் மீது தமிழை திணிக்க முடியாது. யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட கூடாது என்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை. பொதுவாகவே பாலியல் துன்புறுத்தல் என்பது தமிழகத்தில் அதிகமாக பரவலாக இருந்து வருகிறது.

குலதெய்வ வழிபாடுக்குச் சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி

இதற்கு அடிப்படையான காரணம் போதை பொருட்களுக்கு இளைஞர்கள், அடிமையாக இருப்பது. தமிழக அரசு கடுமையான நடவடிக்கையின் மூலம் போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தினால் மட்டும் தான் இதுபோன்ற பாலியல் பிரச்னைகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியும். ஏனென்றால் பாலியல் தொந்தரவுகள் பெரும்பாலும் போதைக்கு அடிமையான இளைஞர்களிடம் இருந்து தான் வருகிறது.

நான் என்ன செய்கிறோம் என்று தெரியாதவர்கள் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இதையெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள். கஞ்சா முற்றிலுமாக தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.

திமுகவினருடன் தொடா்பில் உள்ள அதிமுக நிா்வாகிகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை

சென்னை: அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 82 மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்கள், கட்சி நிா்வாகிகள், பூத் கமிட்டி நிா்வாகிகளுடன் காணொலி கலந்தாய்வுக் கூட்டத்தில், திமுகவினருடன் தொட... மேலும் பார்க்க

வீடு திரும்பினார் தயாளு அம்மாள்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்து இன்று (மார்ச் 9) மாலை வீடு திரும்பினார்.92 வயதான அவர், மூச்சத் திணறல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா? பிரேமலதா பதில்

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்ச... மேலும் பார்க்க

சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னை : சென்னையில் இன்று(மார்ச் 9) கடற்கரை, எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கட... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே திடீரென தீப்பிடித்த ஆம்னி வேன்!

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் சேலம் நோக்கிச் சென்ற ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் ஆத்தூரி... மேலும் பார்க்க

சென்னையில் நாளை மழை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

வரும் மார்ச் 11 ஆம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.வரும் மார்ச் 11 ஆம் தேதி... மேலும் பார்க்க