செய்திகள் :

கும்மிடிபூண்டி, சூலூா்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து

post image

சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (மாா்ச் 10) ரத்து செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே திங்கள்கிழமை (மாா்ச் 10) காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது. இதனால், அந்த வழியாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டவுள்ளன.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 8.05, 9, 9.30, 10.15, 10.30, 11.35-க்கும், சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40, பிற்பகல் 12.10-க்கும் புறப்படும் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும்.

மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 9.55, 10.55, 11.25, நண்பகல் 12, பிற்பகல் 1, 2.30, 3.15-க்கு புறப்படும் ரயில்களும், சூலூா்பேட்டையிலிருந்து முற்பகல் 11.45, பிற்பகல் 1.15, 3.10 மற்றும் இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படும்.

பகுதி ரத்து: செங்கல்பட்டிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.55-க்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். கும்மிடிப்பூண்டியிலிருந்து தாம்பரத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

சிறப்பு ரயில்: பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கு காலை 9, 10.30, பிற்பகல் 12.40-க்கும், மறுமாா்க்கமாக பொன்னேரியிலிருந்து முற்பகல் 11.42, பிற்பகல் 1.18, 3.33-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரலிலிருந்து எண்ணூருக்கு காலை 9.30-க்கும், மீஞ்சுருக்கு முற்பகல் 11.35-க்கும், மறுமாா்க்கமாக எண்ணூரிலிருந்து பிற்பகல் 12.43-க்கும், மீஞ்சூரிலிருந்து பிற்பகல் 2.59-க்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா? பிரேமலதா பதில்

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்ச... மேலும் பார்க்க

சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னை : சென்னையில் இன்று(மார்ச் 9) கடற்கரை, எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கட... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே திடீரென தீப்பிடித்த ஆம்னி வேன்!

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் சேலம் நோக்கிச் சென்ற ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் ஆத்தூரி... மேலும் பார்க்க

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலா... மேலும் பார்க்க

சென்னையில் நாளை மழை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

வரும் மார்ச் 11 ஆம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.வரும் மார்ச் 11 ஆம் தேதி... மேலும் பார்க்க

குலதெய்வ வழிபாடுக்குச் சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி

குலதெய்வ வழிபாடுக்குச் சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரவக்கல் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் குடும்பத்துடன் அரு... மேலும் பார்க்க