செய்திகள் :

ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸிகள் அணிய தடை! ஐபிஎல் வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் என்ன?

post image

ஐபிஎல்லில் வீரர்களுக்கு பிசிசியை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 10 அணிகள் மோதும் 18-வது ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.

ஐபிஎல் போட்டிகளுக்குப் பின்னர் நடைபெறும் விருது வழங்கும் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஃபிலாப்பீஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் எனப்படும் கையில்லாத ஆடைகளை வீரர்கள் அணிவதற்கு பிசிசிஐ தடைவிதித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மிகப் பெரிய தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பயிற்சி நேரமாக இருந்தாலும் ட்ரெஸ்ஸிங் அறையில் வீரர்களின் உறவினர்களுக்கு கட்டுப்பாடு, வீரர்களுக்கான பேருந்தில் மேலாளர்களுக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பல நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கமுடியாது என்று நினைத்தாலும், உலகின் பல இடங்களில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் இந்த விதிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இதையும் படிக்க: நடுவருடன் வாக்குவாதம்: விதிகளை மீறிய ஹர்மன்பிரீத் கௌருக்கு அபராதம்!

பயிற்சிக்கான கட்டுப்பாடுகள் என்ன?

  • ரேஞ்ச் ஹிட்டிங் என்னும் நேரடியாக சிக்ஸர் அடிக்க 2 ஆடுகளங்களும் பக்கவாட்டில் ஒரு ஆடுகளமும் வழங்கப்படும்.

  • திறந்தவெளி ஆடுகளத்தில் விளையாட அனுமதியில்லை.

  • முன்கூட்டியே ஆடுகளத்தில் பயிற்சியை முடித்துவிட்டால் மற்ற அணியினர் அதே ஆடுகளத்தில் விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள்.

  • போட்டி நாளில் பயிற்சி எடுக்க அனுமதியில்லை.

  • பிரதான போட்டி நடக்கும் நாளில் உடல் தகுதி சோதனை எதுவும் நடத்தக்கூடாது.

  • பயிற்சிக்காக வீரர்கள் வரும்போது அணி பேருந்தைப் பயன்படுத்தலாம். அணிகள் இரண்டு பிரிவுகளாக பயணிக்கலாம்.

  • பயிற்சி நாள்களில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டுமே டிரஸ்ஸிங் ரூமிலும் விளையாட்டு மைதானத்திலும் அனுமதிக்கப்படுவார்கள்.

  • வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் வேறு வாகனத்தில் பயணிக்கலாம், அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அறையில் இருந்து அணி பயிற்சியைப் பார்க்கலாம்.

இதையும் படிக்க: மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஷ்ரேயஸ் ஐயர்?

போட்டி நாள்

  • அங்கீகரிக்கப்பட்ட வீரர்களின் உதவியாளர்கள், அதிகாரபூர்வ ஆவணத்தை கொண்டுவருவது அவசியமாகும். ஒருவேளை கொண்டுவராத பட்சத்தில் முதல் முறை எச்சரித்து அனுப்பப்படும். இரண்டாவது முறை இதுபோன்று செய்தால் அணிக்கு அபராதம் விதிக்கப்படும்.

  • வீரர்களுக்கு பயிற்சி வலைகள் வழங்கப்பட்டிருந்தாலும், மைதானத்தில் இருக்கும் எல்ஈடி பதாகைகளில் அடித்து சேதப்படுத்தக்கூடாது. அதை வீரர்கள் கடைபிடிக்க வேண்டும்.

  • எல்ஈடி பதாகைகளுக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் போட்டி ஊழியர்கள் உட்காரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

  • அதிக ரன் மற்றும் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் ஆரஞ்சு மற்றும் உதா நிற தொப்பிகளை கட்டாயம் அணிய வேண்டும்.

  • போட்டிக்குப் பின் விருது வழங்கும் நிகழ்ச்சியில், ஃப்ளாப்பி மற்றும் ஸ்லீவ்லெஸ் ஜெர்சி அனுமதிக்கப்படாது. அவ்வாறு அணிந்திருந்தால் முதல் முறை எச்சரிக்கை செய்யப்பட்டு இரண்டாவது முறை அபராதம் விதிக்கப்படும்.

  • கடந்த ஐபிஎல் சீசனைப் போலவே, போட்டி நாள்களில், அணி மருத்துவர் உள்பட 12 அங்கீகாரம் பெற்ற ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

ஜெர்சி நம்பர்

  • ஜெர்சி நம்பர் மற்றும் கிரிக்கெட் உபகரணங்களை மாற்ற நினைத்தால், 24 மணி நேரத்துக்கு முன்னதாக கூறவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மீண்டும் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்! இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் பேட்டி!

இன்று இறுதி ஆட்டம்; இந்தியா - நியூஸிலாந்து பலப்பரீட்சை

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.இரு முறை சாம்பியனான (2013, 2022) இந்திய அணி 3-ஆவது கோப்பைக்கு... மேலும் பார்க்க

காயம் காரணமாக விலகிய வேகப் பந்துவீச்சாளர்; மும்பை இந்தியன்ஸில் இணைந்த ஆல்ரவுண்டர்!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லிஸாத் வில்லியம்ஸுக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல்ரவுண்டரான கார்பின் போஸ்ச் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியுடன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வா? ஷுப்மன் கில் பதில்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருடன் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வுபெற உள்ளார்களா என்பது குறித்து அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.கடந்த மாதம் தொடங்கிய ஐசிசி... மேலும் பார்க்க

வங்கதேசம் - ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று (மார்ச் 8) வெளியிட்டுள்ளது.ஜிம்பாப்வே அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும்; ஐபிஎல் தலைவர் நம்பிக்கை!

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வெல்லும் என ஐபிஎல் தலைவர் அருண் துமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. துபையில் நாளை (மார்ச் 9) நடைபெறும் இற... மேலும் பார்க்க

இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொ... மேலும் பார்க்க