செய்திகள் :

வங்கதேசம் - ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

post image

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று (மார்ச் 8) வெளியிட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இரண்டு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன.

இதையும் படிக்க: இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை!

இதற்கு முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன் பின், தற்போது இரண்டு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டி ஏப்ரல் 20 ஆம் தேதி சில்ஹட் சர்வதேச மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 28 ஆம் தேதி சட்டோகிராமில் உள்ள ஸாகுர் அகமது சௌதரி மைதானத்திலும் தொடங்குகிறது.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டதென்ன? நியூசி. வீரர் பதில்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பிறகு, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

நியூஸி. சுழலில் இந்தியா திணறல்!

துபை : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய பேட்ஸ்மென்களை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: அரைசதம் கடந்து ரோஹித் சர்மா அதிரடி!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று... மேலும் பார்க்க

ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று வருகிறது. இந்தியா மற்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் ... மேலும் பார்க்க

பிரையன் லாராவின் மோசமான சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் மோசமான சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக மேத்யூ வேட்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில... மேலும் பார்க்க