பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக மேத்யூ வேட்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது.
குஜராத் டைட்டன்ஸில் மேத்யூ வேட்
விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியுடன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வா? ஷுப்மன் கில் பதில்!
இது தொடர்பாக குஜராத் டைட்டன்ஸ் அணி அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: சாம்பியன். போராட்ட குணம் கொண்ட வீரர். தற்போது நமது அணியின் உதவிப் பயிற்சியாளர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு உங்களை மீண்டும் வரவேற்கிறோம் மேத்யூ வேட் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மேத்யூ வேட், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் பார்த்திவ் படேலுடன் இணைந்து செயல்படவுள்ளார்.
We love this Saturday Surprise, Wadey!
— Gujarat Titans (@gujarat_titans) March 8, 2025
Welcome back as our .
Matthew Wade | #AavaDe | #TATAIPL2025pic.twitter.com/kIbV73qxL9
மேத்யூ வேட் இரண்டு ஐபிஎல் தொடர்களில் விளையாடியுள்ளார். அவர் விளையாடியுள்ள 15 போட்டிகளில் 12 போட்டிகள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் மேத்யூ வேட் அங்கம் வகித்துள்ளார்.
இதையும் படிக்க: இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த மேத்யூ வேட், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்குபெறாதது குறிப்பிடத்தக்கது.