செய்திகள் :

மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்! விமான சேவைகள் முடக்கம்!

post image

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்த ராக்கெட் வெடித்துச் சிதறியதையடுத்து, அதன் பாகங்கள் எரிந்து கொண்டு விண்ணில் இருந்து விழுந்ததால் விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன.

இதையும் படிக்க : ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்வு!

முன்னதாக கடந்த ஜனவரி 16 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் 7 ராக்கெட் வெடித்துச் சிதறிய நிலையில், ஸ்டார்ஷிப் 8-ஐ உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தெற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில், 9.30 நிமிடங்களில் ராக்கெட்டுடனான தொடர்பை கட்டுப்பாட்டு அறையினர் இழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட வான்வழித்தடத்தில் இயக்கப்படும் விமானங்களை நிறுத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்பிறகு, கட்டுப்பாட்டை இழக்கும் பட்சத்தில் ராக்கெட் தானாக வெடித்துச் சிதறும் வகையில் செய்யப்பட்டிருந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெடிக்க வைத்துள்ளனர்.

ராக்கெட்டின் எரிந்த பாகங்கள் கரீபியன் கடற்பகுதியில் விழுந்தது. எரிந்துகொண்டே பூமியை நோக்கி வந்த பாகங்களை விடியோ எடுத்த பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராக்கெட்டின் பாகங்கள் விழுந்த பகுதிக்கு அருகிலிருந்த 5 விமானங்கள் இரவுவரை தற்காலிகமாக மூடப்பட்டன. அங்கு தரையிறங்க இருந்த விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்,

“ராக்கெட் குப்பைகளில் எந்த நச்சுப் பொருள்களும் இல்லை, இதனால், கடல் உயிரினங்கள் மற்றும் நீரின் தரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

இதுபோன்ற சோதனையின் மூலம், நாம் கற்றுக் கொள்வதில் இருந்து வெற்றி கிடைக்கிறது. இன்றைய ஸ்டார்ஷிப், நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவும்.

அமெரிக்க விமானத் துறையுடன் இணைந்து முழுமையான விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது.

ரஷிய தாக்குதலில் 20 போ் உயிரிழப்பு: உக்ரைன்

தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 20 போ் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:டொனட்ஸ்க், காா்கிவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா வ... மேலும் பார்க்க

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

நேபாளத்தில் சனிக்கிழமை அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆய்வு மையம் (என்இஎம்ஆா்சி) கூறியதாவது:ேதிபத்தையொட்டி நேபாள பகுதியில... மேலும் பார்க்க

சிரியா: பாதுகாப்புப் படையுடனான வன்முறையில் உயிரிழப்பு 600-ஆக அதிகரிப்பு!

ஆப்பிரிக்காவிலுள்ள சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் அங்கு ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை... மேலும் பார்க்க

போப் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? -வாடிகன் தகவல்

போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, அன்னாரது உடல்நிலை தேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமை(மார்ச் 8) வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் பிரான்சிஸ்... மேலும் பார்க்க

மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆப்கன் நாட்டினர் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும்

மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஏஆர்ஒய் செய்திகளின்படி, ஆப்கானிஸ்தான் குடியுரிமை அட்டை வைத்திருப்பவர்க... மேலும் பார்க்க

மகளிர் நாள்: கூகுளின் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்!

உலகம் முழுவதும் மகளிர் நாள் இன்று(மார்ச் 8) கொண்டாடப்படுவதையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை(டூடூல்) வெளியிட்டுள்ளது. இந்தாண்டு ஸ்டெம்(STEM - Science, Technology, Engineering an... மேலும் பார்க்க