சாம்பியன்ஸ் கோப்பை: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் திரையிடல்!
‘மீண்டும் மஞ்சப்பை’ விருது பெற விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியா்
‘மீண்டும் மஞ்சப்பை’ விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மீண்டும் மஞ்சப்பை விருது -2025’ பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கவுள்ளதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 01.05.2025 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.