செய்திகள் :

காஷ்மீரில் 3 மாத விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!

post image

காஷ்மீரில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த காஷ்மீரில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

காஷ்மீரில் நிலவிவந்த அதீத குளிர் காரணமாக கடந்த மூன்று மாதங்களாகப் பள்ளிகளுக்குக் குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மார்ச் 1ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் மோசமான வானிலை காரணமாக மேலும் விடுமுறையை ஒரு வாரக் காலம் நீட்டித்தது அரசு.

இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் செயல்படும் சுமார் 10,000 அரசு மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகள் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதற்கு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் சகினா இட்டூ வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மூன்று மாத குளிர்கால விடுமுறைக்குப் பிறகு மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேருவதால், அவர்களது எதிர்காலம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

குறிப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களை நான் பாராட்டுகிறேன், இதை மறக்கமுடியாத, வெற்றிகரமான ஆண்டாக மாற்றுவதற்கு நன்றி என்று அவர் கூறினார்.

ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!

கொல்கத்தா ஆர்ஜி கர் பெண் பயிற்சி மருத்துவரின் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உதவுமாறு, பலியான பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகம் முழுவதும் சனிக்கிழமையில் சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப... மேலும் பார்க்க

லக்னௌ: பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளூர் பத்திரிகையாளராக இருந்த ராகவேந்திரா பாஜ்பாய், சனிக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மாநில அந்தஸ்து வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: பரூக் அப்துல்லா வேண்டுகோள்

‘நாடாளுமன்றத்தில் உறுதியளித்தபடி ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை இந்திய அரசு திரும்ப வழங்க வேண்டும்’ என்று அந்த யூனியன் பிரதேசத்தின் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் பரூக் அப்துல்லா சனிக்கிழமை கே... மேலும் பார்க்க

அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்கேற்ற 15 பெண்கள் குறித்த நூல் வெளியீடு

நமது சிறப்பு நிருபா் அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்களிப்பை வழங்கிய அம்மு சுவாமிநாதன், தாக்ஷாயணி வேலாயுதன் உள்ளிட்ட புகழ்பெற்ற 15 பெண்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சக... மேலும் பார்க்க

உ.பி. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேடு: 14 போ் கைது

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவா் உயிரிழப்பு; 25 போ் காயம்

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரா் ஒருவா் உயிரிழந்தாா். 25 போ் காயமடைந்தனா். மணிப்பூரில் தடையற்ற போக்குவரத்தை மாா்ச் 8-ஆம் த... மேலும் பார்க்க