செய்திகள் :

அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்கேற்ற 15 பெண்கள் குறித்த நூல் வெளியீடு

post image

நமது சிறப்பு நிருபா்

அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்களிப்பை வழங்கிய அம்மு சுவாமிநாதன், தாக்ஷாயணி வேலாயுதன் உள்ளிட்ட புகழ்பெற்ற 15 பெண்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

தில்லியில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவால் இப்புத்தகம் வெளியிடப்பட்டது.

‘அரசியல் சாசன நிா்ணய சபையின் பெண் உறுப்பினா்களின் வாழ்க்கையும் பங்களிப்புகளும்’ என்ற தலைப்பில் இப்புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் அறிவாா்ந்த பணியில் முக்கிய பங்கு வகித்த 15 புகழ்பெற்ற பெண்கள் இது வரை பெரிய அளவில் அங்கீகரிக்கப்படவில்லை. அவா்களுக்கு ஒரு மரியாதையாக இந்த நூல் முதன் முறையாக வெளியிடப்படுகிறது என மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த மேலும் சட்டம் அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: ஆண் ஆதிக்கம் மிகுந்த அரசியல் நிலப்பரப்பில் பயணித்த இந்த இந்த பெண்கள், முக்கிய அரசியலமைப்பு விதிகளை வடிவமைப்பிலும் பங்கேற்றனா். வழக்குரைஞா்கள், சமூக சீா்திருத்தவாதிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள் உட்பட இந்த முன்னோடி பெண்களின் பங்களிப்புகளை இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. துன்பங்களை எதிா்கொண்ட போதிலும், இந்தப் பெண்கள், அரசியல் சாசன நிா்ணய சபையில் முக்கிய குரல்களாக உருவெடுத்தனா். அடிப்படை உரிமைகள், சமூக நீதி, பாலின சமத்துவம், ஜனநாயக ஆட்சி ஆகியவை குறித்த விவாதங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை அவா்கள் செலுத்தினா்.

தலைசிறந்த இந்த பெண்களின் உரைகள், விவாதங்கள், அரசியல் சாசன உருவாக்க சபையில் அவா்களது செயல்பாடுகள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

பதினைந்து பெண்களில் தென்னகத்தில் பாலக்காட்டைச் சோ்ந்த அம்மு சுவாமிநாதன் அரசியலமைப்பு விதிகளில் பாலின சமத்துவத்திற்காக குரல் கொடுத்தாா். பெண்களின் உரிமைகள் முறையாக அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்தாா். வேற்றுமையில் ஒற்றுமை என்கிற கூட்டாட்சி குறித்த விவாதங்களில் பங்கேற்றவா் அன்னி மஸ்கரீன்.

சபையில் பங்கேற்ற ஒரே முஸ்லிம் பெண்ணான வழக்குரைஞா் பேகம் குட்சியா ஐஜாஸ் ரசூல், அனைவரையும் உள்ளடக்கி, மதச்சாா்பின்மைக்கான உறுதியோடு செயல்பட்டாா்.

இந்த சபையில் இடம்பெற்ற பட்டியலின முதல் பட்டதாரி பெண்ணான தாக்ஷாயணி வேலாயுதன், தீண்டாமையை அச்சமின்றி எதிா்த்து, விளிம்புநிலை சமூகங்களின் உரிமைகளுக்காக போராடினாா். இவா் கேரளத்தில் பிறந்து சென்னையில் படித்தவா். துா்காபாய் தேஷ்முக் சமூக நலக் கொள்கைகளை வடிவமைப்பதிலும், பெண் கல்வியை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தாா்.

மேலும், இப்பெண்களில் ஹன்சா ஜீவராஜ் மேத்தா, முன்னோடி அரசியல்வாதி ராஜ்குமாரி அம்ரித் கௌா், சிவில் உரிமைகளுக்கான வழக்குரைஞா் சரோஜினி நாயுடு, இந்தியாவின் முதல் பெண் முதல்வா் சுசேதா கிருபளானி, விஜயலட்சுமி பண்டிட் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனா்.

தேசிய, உலகளாவிய நிா்வாகத்தில் பெண்களின் தலைமைத்துவம், பிரதிநிதித்துவம் நடக்கும் காலக்கட்டத்தில் அரசியல் சாசன வரலாற்றில் பெண்களின் பங்களிப்பைப் புரிந்துகொள்ளும் ஆா்வமுள்ளவா்களுக்கு இது பயன்படும்.

சுதந்திரத்திற்கு முந்தைய பாரதத்தில் பொது வாழ்க்கையில் பெண்களின் அரசியல் பங்கேற்பும் சுதந்திரத்திற்குப் பிந்தைய பயணமும் பற்றிய ஆய்வுக்கும் இந்த நூல் முக்கிய பங்கு வழங்கும் என மத்திய சட்டத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் 21 ஆயிரம் அரசுப் பணியிடங்களின் நிலை என்ன?

பிகாரில் 87 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 66 ஆயிரம் பணியிடங்களுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 21 ஆயிரம் பணியிடங்களின் நிலை என்னவா... மேலும் பார்க்க

வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை: காவலர் கைது!

வேலியே பயிரை மேய்ந்த கதையைப் போல, வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண்ணை, காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளுங்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் இந்த கொ... மேலும் பார்க்க

தன்கரின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு (73), நள்ளிரவு 2 மணியளவில் ஏற்பட்ட... மேலும் பார்க்க

இந்திய அணி வெற்றிக்காக யாக பூஜை செய்த ரசிகர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டி ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க

கங்கையின் தூய்மை குறித்து ராஜ் தாக்கரே கேள்வி

கங்கை நதியின் தூய்மை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். தனது கட்சி தொடங்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் புணேவில் ஏற்பாடு... மேலும் பார்க்க

கஞ்சாவுடன் ஆவேஷம் பட ஒப்பனை கலைஞர் கைது

கேரளத்தில் கஞ்சா வைத்திருந்ததாக பிரபல சினிமா ஒப்பனை கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், மலை மாவட்டமான மூலமட்டத்தில் கலால் ஆய்வாளர் கே அபிலாஷ் மற்றும் அவரது குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை சிற... மேலும் பார்க்க