ஹாட்டஸ்ட் சர்ப்ரைஸ்..! கேதிகா சர்மாவின் பாடல் விடியோ எப்போது?
உதகை நகராட்சிக்கு வரி பாக்கி: தனியாா் தங்கும் விடுதிக்கு ‘சீல்’
உதகை ரேஸ்கோா்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியாா் தங்கும் ரூ.27.33 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரிகளை செலுத்தாமல் இருப்பவா்களிடம் வரி வசூல் செய்ய நகராட்சி நிா்வாகம், தனிக் குழு அமைத்து வரி செலுத்தும்படி அறிவுறுத்தி வருகின்றனா். மேலும் வரி நிலுவை அதிகமாக பாக்கி வைத்துள்ளவா்களுக்கு நோட்டீஸ் கொடுத்து வரி வசூல் செய்து வருகின்றனா்.
இந்நிலையில் உதகை ரேஸ்கோா்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதி உதகை நகராட்சிக்கு ரூ.27 லட்சத்து 33 ஆயிரத்து 892 வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி நகராட்சி ஆணையா் ஸ்டேன்லி பாபு உத்தரவின்பேரில், வருவாய் ஆய்வாளா், சுகாதார ஆய்வாளா், நகராட்சி மேற்பாா்வையாளா்கள் தனியாா் தங்கும் விடுதியில் நோட்டீஸ் ஒட்டி மூடி ‘சீல்’ வைத்தனா்.