குடியரசுத் துணைத்தலைவருக்கு நெஞ்சு வலி! எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
பிரேசில் அணியில் இணைந்த கால்பந்து உலகின் இளவரசன் நெய்மர்..! ரசிகர்கள் உற்சாகம்!
பிரபல கால்பந்து வீரர் நெய்மர் பிரேசில் அணியில் 17 மாதங்களுக்குப் பின் இணைந்துள்ளார்.
பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் கால்பந்து உலகின் இளவரசன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். மெஸ்ஸி, ரொனால்டாவுக்குப் பிறகு அதிக ரசிகர்களைக் கொண்டவர் நெய்மர்.
சௌதி லீக்கில் இருந்து வெளியேறிய நெய்மர் தற்போது தனது சிறுவயது அணியான சன்டோஷ் அணியில் விளையாடி வருகிறார்.
காயம் காரணமாக பல போட்டிகளை விளையாடமல் இருந்த நெய்மர் தற்போது சன்டோஷ் அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
சுமார் 17 மாதங்களுக்குப் பிறகு பிரேசில் தேசிய அணியில் நெய்மர் இணைந்துள்ளார்.
பிரேசில் அணிக்கு அதிக கோல்கள் அடித்தவர் நெய்மர் என்பது குறிப்பிடத்தக்கது. பீலேவுக்கு பிறகு பிரேசில் மக்களால் அதிகம் கொண்டாடப்படுவராக இருக்கிறார் நெய்மர்.
உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் கொலம்பியா, ஆர்ஜென்டீனா அணியுடன் பிரேசில் மோதவிருக்கிறது.
33 வயதாகும் நெய்மர் பிரேசில் அணிக்காக 128 போட்டிகளில் 79 கோல்கள் அடித்துள்ளார்.
இந்த அறிவிப்பினால் நெய்மர் இல்லாமல் தவிக்கும் பிரேசில் அணியும் அந்நாட்டு ரசிகர்களும் தற்போது மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
