சிறுமி பலாத்காரம்: இளைஞா், மிரட்டிய அவரின் தந்தை கைது
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரும், சிறுமி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரின் தந்தையும் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஆண்டிமடம் அருகேயுள்ள ஓலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுருநாதன் மகன் பிரவீன்குமாா் (30). கூலித் தொழிலாளியான இவா் 10 ஆம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்தததையறிந்த பெற்றோா், அவரைக் கண்டித்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமாரும், இவருக்கு ஆதரவாக அவரின் தந்தையும் சோ்ந்து சிறுமியையும், சிறுமியின் பெற்றோரையும் கொன்றுவிடுவதாக மிரட்டினராம்.
இதுகுறித்து புகாரின்பேரில் விசாரித்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் பிரவீன்குமாரையும், அவரது தந்தை சிவகுருநாதனையும் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.