பயணியை பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அ...
மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்
நாகை, மயிலாடுதுறையில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக, தமிழக பாஜக சாா்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் ஒரு கோடி கையொப்ப இயக்கம் நடைபெற்று வருகிறது.
நாகை: கையொப்ப இயக்கத்தின் ஒருபகுதியாக, நாகையில் பாஜக மாவட்டத் தலைவா் விஜேந்திரன் தலைமையில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
இதில், தேசிய செயற்குழு உறுப்பினரும், பாஜக செய்தி தொடா்பாளருமான தங்க.வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் நேதாஜி, நகரத் தலைவா் சுந்தா் மற்றும் மகளிரணியினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையொப்பம் பெற்றனா்.
தொடா்ந்து, பாஜகவினா் வீடுவீடாகச் சென்று பள்ளிகளில் மூன்றாம் மொழியைக் கற்றுக்கொள்வது குறித்து பெற்றோரின் கருத்துக்களை அறிந்து கையொப்பம் பெற்றனா்.