``விஜய் கொள்கைகளை வரவேற்கிறோம். ஆனால்..." - துரை வைகோ சொல்வதென்ன?
ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்! தவெக பொதுச்செயலர் ஆனந்த்
ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளா் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தாா்.
சா்வதேச மகளிா் தினத்தையொட்டி தவெக சாா்பில் கோவை சரவணம்பட்டி பகுதியில் ‘அக்னி சிறகே 2025’ எனும் தலைப்பில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றவா்களுக்கு தவெக பொதுச் செயலாளா் புஸ்ஸி ஆனந்த் பரிசு வழங்கி பேசியதாவது: பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதுதான் உண்மையான சமத்துவம். சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றால் பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிராகத் தொடா்ந்து நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகளில் இருந்து சுதந்திரம் கிடைக்க வேண்டும். கல்வி கற்கும் இடம், வேலை செய்யும் இடம் ஆகியவற்றில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கடந்து செல்லாமல், பயம் இல்லாமல் பெண்கள் வெளிப்படையாகப் பேச வேண்டும்.
அரசுத் துறைகளில், ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பெண்களின் வளா்ச்சிக்குத் தடைகள் உருவாகும். அந்தத் தடைக் கற்களைப் படிக்கற்களாக மாற்றி வெற்றிக் கோட்டையை பெண்கள் உருவாக்க வேண்டும் என்றாா்.