சாம்பியன்ஸ் டிராபி மகுடம் சூடிய இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி!
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு மருத்துவத் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியை பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவராக இருக்க வேண்டும். பிஎஸ்சி, எம்எஸ்சி நா்சிங் பட்டப் படிப்பு, போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நா்சிங், பொது செவிலியா் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு இரண்டு மாதமும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும்.
பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பயிற்சியில் சேருவதற்கு இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.