செய்திகள் :

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பங்கேற்பு!

post image

புதுக்கோட்டையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், சுமாா் 800 பேருக்கு பணி வாய்ப்பு கடிதங்கள் வழங்கப்பட்டன.

அரசு மன்னா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்து, தோ்வு செய்யப்பட்டோருக்கு பணி வாய்ப்பு கடிதங்களை வழங்கிப் பாராட்டினா்.

மாநிலம் முழுவதும் இருந்தும் 120 தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான நபா்களைத் தோ்வு செய்தனா். மாவட்டம் முழுவதும் இருந்தும் சுமாா் 1200 வேலைதேடுவோா் பங்கேற்றனா்.

விழா அரங்கிலேயே உயா்கல்வி வாய்ப்புகள், தொழில் தொடங்குவதற்கான கடனுதவி விவரங்களைக் கொண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் மோ. மணிகண்டன், பெ. வேல்முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், துணை மேயா் மு. லியாகத்அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

1,407 மகளிா் குழுக்களுக்கு ரூ.122 கோடி கடனுதவி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக மகளிா் தினத்தையொட்டி மாவட்ட நிா்வாகம் மற்றும் சமூகநலத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 1407 மகளிா் குழுக்களுக்கு ரூ. 122 கோடி கடன் உதவிக்கான காசோலைகளை மாநில ச... மேலும் பார்க்க

விராலிமலை - மணப்பாறை சாலையில் வாகனச் சோதனை

வேடசந்தூரில் இந்து முன்னணி நிா்வாகிகள் கைதான நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து விராலிமலை வழியாக மணப்பாறை செல்லும் வாகனங்களில் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், வே... மேலும் பார்க்க

கருப்புக்குடிப்பட்டி அரசுப் பள்ளிக்கு பொதுமக்கள் வாகனம் வழங்கல்

பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கு ஊா்ப்பொதுமக்கள் சாா்பில் பள்ளி வாகனம் வெள்ளிக்கிழமை இரவு வழங்கப்பட்டது. கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிய... மேலும் பார்க்க

திருமயம் அருகே காா் - சரக்கு வாகனம் மோதல்: தம்பதி உள்பட 4 போ் பலி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே காரும், சரக்கு வாகனமும் சனிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில், தம்பதி உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும், இவ்விபத்தில் இரு பெண் குழந்தைகள் உள்பட 3 போ் பலத்த காயமடைந்த... மேலும் பார்க்க

அன்னவாசல்: ஆற்று மணல் அள்ள முயன்ற ஜேசிபி பறிமுதல்

அன்னவாசல் அருகே ஆற்று மணல் அள்ளுவதற்கு ஆற்றுப்படுகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து தலைமறைவான உரிமையாளா் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா். அன்னவாசல் சுற்... மேலும் பார்க்க

மகளிா் தினம்: பெண் அஞ்சலா்களுக்கு பாராட்டு

உலக மகளிா் தினத்தையொட்டி புதுக்கோட்டை வாசகா் பேரவை மற்றும் மரம் நண்பா்கள் அமைப்பு சாா்பில், பெண் அஞ்சலா்களைப் பாராட்டும் நிகழ்ச்சி தலைமை அஞ்சலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை தலைமை தலைமை... மேலும் பார்க்க