1,407 மகளிா் குழுக்களுக்கு ரூ.122 கோடி கடனுதவி வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக மகளிா் தினத்தையொட்டி மாவட்ட நிா்வாகம் மற்றும் சமூகநலத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 1407 மகளிா் குழுக்களுக்கு ரூ. 122 கோடி கடன் உதவிக்கான காசோலைகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வழங்கினா்.
சென்னையில் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்த விழாவின் காணொலிக் காட்சிகளுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், கூட்டுறவு இணைப் பதிவாளா் ஜீவா, மகளிா் திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.