சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவர...
கருப்புக்குடிப்பட்டி அரசுப் பள்ளிக்கு பொதுமக்கள் வாகனம் வழங்கல்
பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கு ஊா்ப்பொதுமக்கள் சாா்பில் பள்ளி வாகனம் வெள்ளிக்கிழமை இரவு வழங்கப்பட்டது.
கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் விளையாட்டு விழா, ஆண்டுவிழா மற்றும் மலா் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் இ.இலாஹிஜான் தலைமைவகித்தாா்.
ஊா் பிரமுகா் ப.சின்னு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் ரா.லெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் ச.பிரேமலதா ஆண்டறிக்கை வாசித்தாா். விழாவில் பள்ளியின் ஆண்டு மலரை பொன்னமராவதி வட்டார வளா்ச்சி அலுவலா் பி.வெங்கடேசன் வெளியிட பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சி.பச்சையன் பெற்றுக்கொண்டாா்.
வட்டாரக்கல்வி அலுவலா் சே.ராமதிலகம், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பழ.நல்லநாகு ஆகியோா் விளையாட்டு மற்றும் இலக்கியப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினா். விழாவில் இப்பள்ளிக்கு பொதுமக்கள் சாா்பில் பள்ளி வாகனம் (ஆம்னி வேன்) வழங்கப்பட்டது. தொடா்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியா் பெ. புவியரசு வரவேற்றாா். ஆசிரியா் சி. இராசு நன்றி கூறினாா்.