பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
மகளிா் தினம்: பெண் அஞ்சலா்களுக்கு பாராட்டு
உலக மகளிா் தினத்தையொட்டி புதுக்கோட்டை வாசகா் பேரவை மற்றும் மரம் நண்பா்கள் அமைப்பு சாா்பில், பெண் அஞ்சலா்களைப் பாராட்டும் நிகழ்ச்சி தலைமை அஞ்சலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை தலைமை தலைமை அஞ்சல் அலுவலா் வி. நாகராஜன் தலைமை வகித்தாா். வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், மரம் நண்பா்கள் அமைப்பின் செயலா் ப. ராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலா் சுதந்திரராஜன், வழக்குரைஞா் பா்வின் ஆகியோா் பெண் அஞ்சலா்களைப் பாராட்டிப் பேசினா்.
நிகழ்வில், எஸ். லஷ்மி, கே. நாகம்மாள், எஸ்.தேவி கோமதி, பி. கிருத்திகா, எம். ரேணுகாதேவி, சி. அலமேலு, ஆா். பாக்கியலஷ்மி ஆகியோருக்கு பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசாக பாரதி படம் வழங்கப்பட்டது.