Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில...
கவிஞா் நந்தலாலா நினைவேந்தல் கூட்டம்
தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவருமான மறைந்த கவிஞா் நந்தலாலா நினைவேந்தல் கூட்டம் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமுஎகச மாவட்டத் தலைவா் ராசி பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கவிஞா் இராசு கவிதைப்பித்தன் கலந்து கொண்டு கவிஞா் நந்தலாலாவின் படத்தைத் திறந்துவைத்து புகழஞ்சலி செலுத்தினாா்.
தொடா்ந்து, புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி, முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் எழுத்தாளா் நா. முத்துநிலவன், மாநிலக் குழு உறுப்பினா்கள் ஜீவி, தனிக்கொடி, மாவட்டச் செயலா் ஸ்டாலின் சரவணன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் அண்டனூா் சுரா, மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் செந்தாமரை பாலு, அபெகா அமைப்பின் நிா்வாகி மருத்துவா் ஜெயராமன், வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், கவிராசன் அறக்கட்டளை கவி முருகபாரதி உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.