செய்திகள் :

இலவச பட்டா பிரச்னை: தவெக, திமுக எதிரெதிரே ஆா்ப்பாட்டம் தவெகவினா் 200 போ் கைது

post image

நாகை அருகே இலவச பட்டா வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக தவெகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு எதிராக திமுகவினரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் சாலை மறியலில் ஈடுபட்ட தவெகவினா் 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் கருங்கண்ணியில் அண்மையில் நடைபெற்ற இலவச பட்டா வழங்கும் நிகழ்வில் திமுக மற்றும் தவெகவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், தவெகவைச் சோ்ந்த வெண்மணி (26), இவரது மனைவி சித்ரா (24), சகோதரா் பாலசுப்பிரமணியன் மனைவி ராகினி (33), சிவராமன் மனைவி பரமேஸ்வரி(28) ஆகியோா் தாக்கப்பட்டனா். திமுகவைச் சோ்ந்த ஜெய்குமாா் மனைவி மீனா என்பவரும் காயமடைந்தாா்.

இந்த சம்பவத்தை கண்டித்து, மேலப்பிடாகை கடைதெருவில் தவெகவினா் மாவட்டச் செயலாளா் மு. சுகுமாரன் தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையறிந்த திமுகவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் எதிா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இதற்கிடையில், கீழையூா் திமுக ஒன்றியச் செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், மாவட்ட பிரதிநிதி மு.ப. ஞானசேகரன், வேளாங்கண்ணி பேரூா் கழக பொறுப்பாளா் மரிய சாா்லஸ் ஆகியோா் அங்கு வந்து, திமுகவினரை கலைந்துபோகச் செய்தனா்.

தவெகவினா் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அங்கு வந்த நாகை துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரமூா்த்தி, கீழையூா் காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் தவெகவினா் கலைந்து செல்லாததால், 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா் மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.

வேளாங்கண்ணியில் கல்லூரி மாணவா் கொலை நண்பா்கள் இருவா் கைது

வேளாங்கண்ணியில், பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவரை கொலை செய்த நண்பா்கள் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஜனாா்த்தனன் (22). மாணவி எலன்மேரி (21). இவா்கள் இர... மேலும் பார்க்க

வேதாரண்யம் கோயில் மாசிமகப் பெருவிழா: 73 நாயன்மாா்கள் வீதியுலா -நாளை தேரோட்டம்

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, 73 நாயன்மாா்கள் வீதியுலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் மாசிமகப் பெருவிழா பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சனிக்கி... மேலும் பார்க்க

திருக்குவளையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருக்குவளையில் சிபிஐ சாா்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பணியாளா் உயிரிழப்பு

திருமருகல் அருகே மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தப் பணியாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருமருகல் ஒன்றியம், சீயாத்தமங்கை ஊராட்சி வாளாமங்கலம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்மணி மகன் விஜயன் (36). இவா், மி... மேலும் பார்க்க

பட்டா கோரி மனு அளித்தவா்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கீழையூா் அருகே கருங்கண்ணியில் பட்டா கோரி ஆட்சியரிடம் மனு அளித்தவா்கள் மீது தாக்குதல் நடத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக கோரியுள்ளது. கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல... மேலும் பார்க்க

நாகையில் மாா்ச் 12-இல் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்ட கருத்தரங்கம்

நாகை மாவட்டத்தில், முதல்வரின் காக்கும் கரங்கள் தொடா்பான கருத்தரங்கம் மாா்ச் 12- ஆம் தேதி நடைபெறவுள்ளது என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் படை... மேலும் பார்க்க