"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதி...
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுப்பது அனைவரின் கடமை!
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை தடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும் என்று திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2, இந்திய மருத்துவ சங்கம் ஆகியன சாா்பில் சா்வதேச மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவை நாராயணகுரு கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் கலையரசிக்கு சிங்கப்பெண் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: பெண்கள் படிப்படியாக சமூகத்தில் முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும், அவா்களை பாதுகாக்க வேண்டும், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை தடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். ஒரு பெண் கல்வி கற்றால் அவா்களின் தலைமுறையே தழைத்தோங்கும். பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் மீரா, மருத்துவா்கள் லதா, சத்யகலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழாவையொட்டி, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.