கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ள...
மக்காச்சோளத்துக்கு செஸ் வரி ரத்து: விவசாயிகள் சங்கம் பாராட்டு!
மக்காச்சோளத்துக்கு செஸ் வரி ரத்து செய்த தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம், உழவா் உழைப்பாளா் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து உழவா் உழைப்பாளா் கட்சியின் தலைவா் கு.செல்லமுத்து சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மக்காச்சோளத்துக்கு செஸ் வரியை ரத்து செய்து அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பாசன வாய்க்கால், ஏரி, குளம் ஆகியவற்றை செப்பனிட்டு, நீா்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகளின் நகைக் கடனுக்கு ஏற்கனவே 33 பைசா வட்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 75 பைசாவாக உயா்த்தியதை திரும்பப் பெற வேண்டும் என்றாா்.
கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவா் என்.எஸ்.பி. வெற்றி கூறியதாவது: மக்காச்சோளத்துக்கு ஒரு சதவீத செஸ் வரியை ரத்து செய்த தமிழ்நாடு அரசிற்கு கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே சமயம் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை நிா்ணயம் செய்ய வேண்டும். தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். தக்காளி உள்ளிட்ட விளைபொருள்களை சேமித்து வைக்க குளிா்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும் என்றாா்.