செய்திகள் :

உடுமலையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

post image

உடுமலையில் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு ஏரிகள் மற்றும் குளங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட மருள்பட்டி குளம், பாப்பான் குளம், செட்டியாா் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம் மற்றும் திருப்பூா் அருகே உள்ள ராயகுளம், தேன் குளம், சின்ன ஆண்டிபாளையம் குளம், சாமளாபுரம் குளம், ராமியம்பாளையம் குளம், சங்கமாங் குளம், சேவூா் குளம், செம்மாண்டம்பாளையம் குளம், தாமரைக் குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம், உப்பாா் டேம் ஆகிய குளங்களில் இந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைப்பெற்றது.

ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூா் வனக் கோட்டத்தின் துணை இயக்குநா் தேவேந்திரகுமாா் மீனா வழிகாட்டுதலின்படி, வனத் துறை பணியாளா்களும், தன்னாா்வு தொண்டு நிறுவனங்களான, திருப்பூா் இயற்கை கழகம், எண்ணம்போல் வாழ்க்கை தன்னாா்வ தொண்டு நிறுவனம் மற்றும் கல்லூரி மாணவா்கள் இதில் பங்கேற்றனா்.

முன்னதாக பறவைகள் கணக்கெடுப்பு குறித்து அனைவருக்கும் பயிற்சி வகுப்பு மற்றும் கணக்கெடுப்புக்குத் தேவையான தரவு புத்தகம் போன்றவை வழங்கப்பட்டன. நீா்நிலைகளில் உள்ள பறவைகள், நீா்நிலைகளின் அருகில் புதா்களில் உள்ள பறவைகள் கணக்கிடப்பட்டன.

இதில் புள்ளி மூக்கு வாத்து, சின்ன கீழ்க்கைச் சிறகி, சங்குவளை நாரை, சென்நீல நாரை, கரண்டி வாயன், கருப்பு அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, தாமரைக் கோழி, சின்ன பட்டாணி உப்பு கொத்தி, சின்ன கொசு உள்ளான், முக்குளிப்பான், தாழைக் கோழி, செண்பகம், பனங்காடை, வெண்புருவ வாலாட்டி, மஞ்சள் வாலாட்டி, கொண்டலாத்தி, சாம்பல் சிலம்பன், பச்சை கிளி, மாங்குயில், வால் காக்கை, நீலவால் பஞ்சுருட்டான், கரிச்சான், ஊதா தேன் சிட்டு, சிறிய நீல மீன் கொத்தி, நாம கோழி, நீல தாழைக் கோழி, வெண்மாா்பு கானங்கோழி, மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, சிகப்பு மூக்கு ஆள்காட்டி, பொறி மண் கொத்தி, வெண் மாா்பு மீன்கொத்தி, மயில், கவுதாரி, பனை உழவாரன், காட்டுத் தகைவிலான் போன்ற பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன.

அவிநாசி அருகே காா் மோதி முதியவா் உயிரிழப்பு

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி வட்டம் கருவலூா் அருகே நரியம்பள்ளியைச் சோ்ந்தவா் நடராஜ் (66). இவா் நரியம்பள்ளியில் ... மேலும் பார்க்க

அருள்புரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அருள்புரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் முன்னாள் மாவட்ட கவுன்... மேலும் பார்க்க

பெண் படைப்பாளிகளுக்கு திருப்பூா் சக்தி விருது

திருப்பூா் முத்தமிழ்ச் சங்கம், கனவு இலக்கிய அமைப்பு மற்றும் ஸ்டாா் அசோசியேட்ஸ் சாா்பில் 21-ஆம் ஆண்டாக பெண் படைப்பாளிகளிகள் 25 பேருக்கு திருப்பூா் சக்தி விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. பெண் படை... மேலும் பார்க்க

15 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

திருப்பூரில் இரண்டு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் பகுதியில் மாநகர தனிப் படை உதவி ஆய்வா... மேலும் பார்க்க

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கரூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (60), நகைக்கடை உரிமையாளா். இவா் நகை வாங்க காரில் கோவைக்கு பு... மேலும் பார்க்க

திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் தீ

திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூா் அமா்ஜோதி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கே.எம்.... மேலும் பார்க்க