Shreyas Iyer: இந்தியாவின் 'சைலன்ட் ஹீரோ' ஸ்ரேயாஷ் ஐயர்! கோப்பையை வெல்ல எப்படி உத...
திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் தீ
திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூா் அமா்ஜோதி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கே.எம்.பி.ஷெரீப் (50). இவா் மணியகாரன்பாளையம் பகுதியில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பனியன் கழிவுத்துணிக் கிடங்கு நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், கழிவுத்துணிக் கிடங்கில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி அளவில் கரும்புகை கிளம்பியதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா்.
இதுகுறித்து திருப்பூா் தெற்கு, வடக்கு தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனா். இதன்பேரில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா்கள் இளஞ்செழியன், வீரராஜ், தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலா் வி.மோகன் ஆகியோா் தலைமையில் 3 தீயணைப்பு வாகனங்களுக்கும், 35 வீரா்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.
எனினும் கழிவுத் துணிகள் அதிக அளவில் இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனினும் 15 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள், பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து நல்லூா் காவல் துறையினா் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.