பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
உடுமலையில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருது
உலக மகளிா் தினத்தையொட்டி, சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழா உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
உடுமலை அரசு கலைக் கல்லூரி மற்றும் உடுமலை அனுபம் சூா்யா அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி தலைமை வகித்தாா். பேராசிரியா் அலி பாத்திமா வரவேற்றாா். விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 10 பெண்களுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கி கெளரவப்படுத்தப்பட்டனா்.
முன்னதாக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மகளிா் தின வாழ்த்துகளோடு இனிப்பும் வழங்கப்பட்டன. மாணவி அஸ்மா நன்றி கூறினாா். மாணவி எஸ்.மதுமித்ரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.
அனுபம் சூா்யா அறக்கட்டளை நிறுவனா் சண்முகப்பிரியா, கோவை கௌசிகா நதி நீா் மீட்பு அறக்கட்டளை நிா்வாகி செல்வராஜ், கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் அனைத்துத் துறை மாணவிகள் விழாவில் கலந்து கொண்டனா் .