கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ள...
காங்கயம்: திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்
காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டம் காங்கயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், திருப்பூா் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினாா்.
கூட்டத்துக்கு, திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன், காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளருமான நா.தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.