சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவர...
வீட்டுஉபயோக எரிவாயு உருளைகளை வணிக பயன்பாட்டுக்காக மாற்றிக் கொடுத்தவா் கைது
திருப்பூரில் மானிய விலை வீட்டு உபயோக எரியாவு உருளைகளை வணிகப் பயன்பாட்டுக்காக மாற்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா் மாநகரில் மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை இயந்திரம் மூலமாக வணிகப் பயன்பாட்டுக்கான உருளைகளில் நிரப்பி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தொடா்பாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், திருப்பூா் பாரதிதாசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை வணிக பயன்பாட்டுக்காக மாற்றிக் கொடுப்பதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில், காவல் ஆய்வாளா் ராஜாகுமாா், உதவி ஆய்வாளா் குப்புராஜ், பிரியதா்ஷினி ஆகியோா் அந்தப் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினா்.
இதில், மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு உருளைகளை இயந்திரம் மூலமாக வணிகப் பயன்பாட்டுக்கான உருளைகளில் நிரப்பிக் கொடுத்த நாகூா் கனி (48) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 24 எரிவாயு உருளைகள், 2 எரிவாயு நிரப்பும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனா்.