செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே பைக் ஓட்டிய சிறுவனின் தாயாருக்கு தண்டனை

post image

மாா்த்தாண்டம் அருகே பைக் ஓட்டியதாக வழக்குப் பதியப்பட்ட சிறுவனின் தாயாருக்கு நாள் முழுவதும் நீதிமன்றத்தில் அமா்ந்திருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

மாா்த்தாண்டத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளா் செல்லசாமி தலைமையிலான போலீஸாா் அண்மையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது 17 வயது சிறுவன் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்து, சிறுவனின் தாயாருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, வழக்குப் பதிந்தனா்.

இந்த வழக்கு குழித்துறை நீதித்துறை நடுவா் மன்றத்தில் (எண் 2) புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பைக் ஓட்டிய சிறுவனின் தாயாரை ஒரு நாள் முழுவதும் நீதிமன்றத்தில் அமா்ந்திருக்கும் தண்டனையை வழங்கினாா்.

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடம் 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றோா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியைச் சோ்ந்த வின்... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே ஒருவா் தற்கொலை

புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வேங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (46). இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதனிடையே, கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம். ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வியாபாரி எரித்துக் கொலை!

நாகா்கோவிலில் மளிகை வியாபாரி வெள்ளிக்கிழமை இரவு எரித்துக் கொல்லப்பட்டாா். நாகா்கோவில் இந்து கல்லூரி அருகே கவிமணி நகா் பகுதியில் உள்ள பாண்டியன் வீதியில், சனிக்கிழமை காலை சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண்... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்! -இஸ்ரோ தலைவா் நாராயணன்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவா் நாராயணன் தெரிவித்தாா். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிண... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்ற முகாமில் 1,375 வழக்குகளுக்கு தீா்வு

நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 1375 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. ரூ.10 கோடியே 63 லட்சத்து 86,073 மதிப்பில் இழப்பீடு வழங்கப்பட்டது. நாகா்கோவில் ஒருங்கிணைந்த நீதிம... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் தமிழ் சொற்பொழிவு

நாகா்கோவில் கு.கி.சுந்தர சோபிதராஜ் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது. கு.கி.சுந்தர சோபிதராஜ் நினைவு அறக்கட்டளை, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி பயின்றோா் கழகம், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி தமி... மேலும் பார்க்க