புதுக்கடை அருகே ஒருவா் தற்கொலை
புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வேங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (46). இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதனிடையே, கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்க்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.