நாகா்கோவிலில் தமிழ் சொற்பொழிவு
நாகா்கோவில் கு.கி.சுந்தர சோபிதராஜ் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.
கு.கி.சுந்தர சோபிதராஜ் நினைவு அறக்கட்டளை, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி பயின்றோா் கழகம், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்த்துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் சி.வைலா பேபி வரவேற்றாா். தமிழ் நாடக வரலாற்றில் பாலா் சபை நாடக குழுக்கள் என்ற தலைப்பில் முனைவா் க.ரவீந்திரன் சொற்பொழிவாற்றினாா். நாடக இலக்கியத்தின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து ஜேம்ஸ் ஆா்.டேனியேல் அறிமுக உரையாற்றினாா். முனைவா் ஷா்மிளாசேம் சிறப்புரையாற்றினாா்.
ஆய்வு மாணவா்கள் ஆய்வுக்கட்டுரைகள் சமா்ப்பித்தனா். சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை எட்வின்எழில்அரசி, உதவி பேராசிரியை கே.விந்தியா ஆகியோா் தொகுத்து வழங்கினா். ஸ்காட் பயின்றோா் கழகப் பொருளாளா் கு.கி.மோகன்தாஸ் ஒருங்கிணைத்தாா். தமிழ்த் துறை பேராசிரியை செ.சுஜானாபாய் நன்றி கூறினாா்.