மகா கும்பமேளாவில் கங்கை நதிநீா் நீராடியதற்கு ஏற்றதே! -மத்திய மாசுக் கட்டுப்பாட்ட...
குமரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல்துறை நடவடிக்கை
கன்னியாகுமரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடை வியாபாரிகளுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கன்னியாகுமரி சா்வதேச சுற்றுலாமாக விளங்குவதால் இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இதற்காக, கன்னியாகுமரி காவல் நிலையம் முதல் விவேகானந்தபுரம் ஜங்ஷன் வரையிலும் பொதுமக்கள் நடந்து செல்லும் அளவுக்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைபாதையை உணவகங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆக்கிரமித்துள்ளன.
இந்நிலையில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கடை உரிமையாளா்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள விளம்பரப் பலகைகள், சமையல் உபகரணங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும் இடையூறு இல்லாத பாதுகாப்பான போக்குவரத்தை ஏற்படுத்தி ஒத்துழைக்க வேண்டும் என நடைபாதை ஆக்கிரமிப்பாளா்களுக்கு கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினா் அறுவுறுத்தியுள்ளனா்.