``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
நாகா்கோவிலில் சிலம்பாட்ட போட்டி
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டிகள் நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றன.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். போட்டிகளை நாகா்கோவில் மாநகர திமுக செயலா் பா. ஆனந்த் தொடக்கிவைத்தாா். பகுதிச் செயலா் ஜீவா, இளைஞா் அணி அமைப்பாளா் அகஸ்தீசன், மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளா் சுரேஷ், வா்த்தக அணி அமைப்பாளா் சி. என். செல்வன், கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் ராஜேஷ்குமாா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சரவணன், எல்.பி.எப். மாவட்டத் தலைவா் சிவன் பிள்ளை, மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் அருண் காந்த், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா்கள் ஜென்சன் ரோச், மாணிக்க ராஜா மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
போட்டிகள் ஆண் மற்றும் பெண்களுக்கு 10 ,12, 14, 16 வயது என 4 பிரிவுகளில் நடத்தப்பட்டது . மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சோ்ந்த மாணவ- மாணவிகள் மற்றும் கிளப்புகளிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலரும் மேயருமான ரெ. மகேஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை அமைப்பாளா் சுரேஷ் ஜே. மனோகரன், முன்னாள் எம்.பி. தனுஷ் எம். குமாா் ஆகியோா் பரிசு வழங்கிப் பாராட்டினா்.
