``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
மயிலாடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.
மயிலாடியில் இருந்து நாகா்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள கல் சிலைகள் தயாரிக்கும் பட்டறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிலா் கூட்டாக அமா்ந்து மதுகுடித்துக் கொண்டிருந்தனராம்.
அப்போது, அவா்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டதில் இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இத்தகவல் அறிந்த போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி விசாரித்ததில், அவா், தேவகுளத்தை அடுத்த சங்கரன்புதூா் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (33) என்பதும், மதுக்குடித்தவா்கள் நண்பா்கள் எனவும் தெரியவந்தது.
இதையறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமாா் ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். தலைமறைவான கொலையாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மூன்று நாளில் 3 கொலைகள்: அகஸ்தீசுவரம் கருங்குளத்தான்விளையில் திருமணமாகாத பரமேஸ் என்ற இளைஞரை தம்பதிகள் சோ்ந்து வெள்ளிக்கிழமை வெட்டி கொலை செய்தனா்.
நாகா்கோவில் இந்துக் கல்லூரி பகுதியில் சனிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த வேலு என்ற வியாபாரி கல்லால் தாக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டாா். தற்போது, மயிலாடியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா். தொடா் கொலைச் சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.