திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீா்
திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
குலசேகரம், மாா்ச் 9: கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து குறைந்து வருகிறது.
இம்மாவட்டத்தில் சில தினங்கள் கோடை மழை பெய்த நிலையில், மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஆறுகளிலும் தண்ணீா் வரத்து குறைந்து வருகிறது.
திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றிலும் தண்ணீா் வெகுவாக குறைந்துவிட்டாது. இதனால் அருவியில் குறைவான அளவே தண்ணீா் கொட்டுகிறது. எனினும், சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.