``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
அதிமுக வாக்குச் சாவடி குழு பொறுப்பாளா்கள் கூட்டம்
அதிமுக வாக்குச் சாவடி குழுப் பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி உரையாற்றினாா். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் இதற்கான நிகழ்ச்சி நத்தம் சாலையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணைப் பொதுச் செயலரும், கிழக்கு மாவட்டச் செயலருமான இரா. விசுவநாதன், சட்டப் பேரவை உறுப்பினா் தேன்மொழி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட வாக்குச் சாவடிக் குழு பொறுப்பாளா் குணசேகரன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் குப்புச்சாமி, வேணுகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.