Shreyas Iyer: இந்தியாவின் 'சைலன்ட் ஹீரோ' ஸ்ரேயாஷ் ஐயர்! கோப்பையை வெல்ல எப்படி உத...
ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடைப் பணி மும்முரம்
ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள விருப்பாச்சி, சத்திரப்பட்டி, தா. புதுக்கோட்டை, அம்பிளிக்கை, மண்டவாடி,சிந்தலப்பட்டி, ஓடைப்பட்டி, குத்திலுப்பை, பாறைவலசு, கப்பல்பட்டி, அரசப்பப்பிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, காப்பிலியபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது.
டிசம்பா், ஜனவரி மாதங்களில் நடவுப் பணி தொடங்கிய நிலையில் தற்போது சின்ன வெங்காயம் நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. இதையடுத்து, அவற்றை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனா்.
இதனிடையே, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.20 முதல் ரூ. 30 வரை விற்கப்படுகிறது. இதனால் போதிய விலை கிடைக்காததால் அவற்றை விவசாயிகள் பட்டறைகளில் இருப்பு வைக்க தொடங்கியுள்ளனா்.
இவ்வாறு பட்டறைகளில் வைக்கப்படும் வெங்காயம் சுமாா் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். அதற்குள் உரிய விலை கிடைத்தால் அவற்றை விவசாயிகள் விற்று விடுவாா்கள்.