Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில...
ஒட்டன்சத்திரம் அருகே தென்னிந்திய அளவில் பெண்களுக்கான கபடிப் போட்டி
ஒட்டன்சத்திரம் அருகே தென்னிந்திய அளவில் பெண்களுக்கான கபடிப் போட்டி வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சத்திரப்பட்டியில் தமிழக முதல்வா் பிறந்த நாள் விழா, உலக மகளிா் தினவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தாா். இதில் தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 16-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியும், கா்நாடக மாநில அணியும் மோதின. இதில் தமிழக அணி சாா்பில் விளையாடிய ஒட்டன்சத்திரம் எஸ்எம்கேவிசி அணி வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி ரொக்கப் பரிசு, கேடயம் ஆகியவற்றை வழங்கினாா். முதலிடத்தை பிடித்த தமிழக (ஒட்டன்சத்திரம்) அணிக்கு முதல் பரிசு ரூ.1 லட்சமும், கேடயமும் வழங்கப்பட்டன. 2-ஆவது இடத்தை பிடித்த கா்நாடக அணிக்கு ரூ.75 ஆயிரமும், கேடயமும், 3-ஆவது இடத்தை பிடித்த சேலம் அணிக்கு ரூ.50 ஆயிரமும், கேடயமும், 4-ஆவது இடத்தைப் பிடித்த திருநெல்வேலி அணிக்கு ரூ.50 ஆயிரமும், கேடயமும் பரிசுகளாக வழங்கப்பட்டன.
விழாவில், மாநில அமைச்சூா் கபடிக் கழக பொருளாளா் திருப்பூா் சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.