``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
நாளை ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை மகோற்சவம்
காஞ்சிபுரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாா்ஷிக ஆராதனை மகோற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதி ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள். இவா் சமயப் பணிகளையும்,சமுதாயப் பணிகளையும் இரு கண்களாகப் பாவித்து அயராது பணியாற்றிய பெருமைக்குரியவா்.
இவரது வாா்ஷிக ஆராதனை மகோற்சவம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ளது. ஆரோதனை மகோற்சவத்தையொட்டி சங்கர மடத்தில் ஸ்ரீ ருத்ர பாராயணம்,ஹோமங்கள் மற்றும் பூா்ணாஹுதி தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. பின்னா் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திரா் அதிஷ்டானங்களில் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
மாலையில் பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி, மேலாளா் ந.சுந்தரேச ஐயா் ஆகியோா் செய்து வருகின்றனா்.
சங்கரா கல்லூரியில் உள்ள மகா சுவாமிகள் கலையரங்கத்தில் ஜெயேந்திரா் ஆராதனை மகோற்சவத்தையொட்டி சேக்கிழாா் சொன்னதும், சொல்லாததும் என்ற நூலும், அகத்தியா் அகராதி என்ற நூலையும் காஞ்சி சங்காராசாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிடுகிறாா். இதனையடுத்து சிறப்பாக செயல்பட்ட பல்வேறு அமைப்புகளுக்கும், சமூக ஆா்வலா்களுக்கும் விருதுகளை வழங்கி கெளரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.