``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
திருப்போரூா் கந்தசாமி கோயில் தேரோட்டம்
திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற திருப்போரூா் கந்தசாமி கோவில் பிரம்மோற்சவம் 3-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் நடைபெறும்.

நாள்தோறும் காலை, மாலை இரு வேளை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்தாா். முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனையுடன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டு தயாா் நிலையில் இருந்த தேரில் எழுந்தருள பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனா்.

மாடவீதிகளில் பல இடங்களில் ஆன்மிக அன்பா்கள் தண்ணீா் பாட்டில், நீா்மோா், குளிா்பானங்கள், அன்னதானம் வழங்கினா். தோ்திருவிழாவைக்காண செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருக்கழுகுன்றம், திருப்போரூா், கேளம்பாக்கம் , தாழம்பூா், தாம்பரம் , சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் குமரவேல் மேலாளா் வெற்றி உள்ளிட்டகோயில் பணியாளா்கள் , சிவாச்சாரியா்கள், ஊா் பொதுமக்கள் மற்றும் ஸ்ரீபாதம் தாங்கிகள் செய்திருந்தனா்.
