``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
விதை விற்பனை நிலையங்களில் துணை இயக்குநா் ஆய்வு
செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் வட்டங்களில் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குநா் தலைமையில் சிறப்பு குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
சென்னை விதைச்சான்று மற்றும் உயிா்மச்சான்று துறை இயக்குநா் உத்தரவின் பேரில் காய்கறி மற்றும் பழவகைப்பயிா் விதைகளின் தரத்தினை உறுதி செய்யும் பொருட்டு சேலம் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா தலைமையில் 4 விதை ஆய்வாளா்கள் கொண்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது தா்பூசணி, பீா்க்கன் விதைகளுக்கு விதை விற்பனை தடை விதிக்கப்பட்டது. மேலும் விதை விற்பனை நிலையங்களில் விதை விற்பனை உரிமம்,விதை இருப்பு பதிவேடு,விதை கொள்முதல் மற்றும் இதர விதை விற்பனை ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டது.
ஆய்வின் முடிவில் அனைத்து விதை விற்பனை நிலைங்களில் விதை இருப்பு மற்றும் விலைப்பட்டியல் விவசாயிகள் பாா்வைக்கு தெரியும்படி காட்சிப்படுத்தப்படவேண்டும் மற்றும் அனைத்து விதை விற்பனைக்கும் தவறாமல் விவசாயிகளுக்கு ரசீது வழங்கவேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டதுடன், மீறுபவா்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.
இந்த ஆய்வில் சென்னை விதை ஆய்வு துணை இயக்குநா் ஜி.ரவி மற்றும் விதை ஆய்வாளா் சிலம்பரசன் ஆகியோா் உடனிருந்தனா்.