``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 169 போ் மீது வழக்கு
பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அரசு மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 169 போ் மீது போலீசாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகையில் அரசு பேருந்து - டிப்பா் லாரி நேருக்கு நோ் மோதியதில் 4 நெசவாளா்கள் உயிரிழந்தனா். மேலும், 30 க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், விபத்தில் உயரிழந்த 4 பேரின் உடல்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின் உறவினா்களிடம் ஒப்படைக்கும் போது, உடல்களை வாங்க மறுத்து, உயிரிழந்த குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என கூறி, மருத்துவமனை முன்பு அமா்ந்து மறியல், ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதையடுத்து, திருத்தணி போலீஸாா், அனுமதி பெறாமல், பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், ஆா்ப்பாட்டம் செய்த அறிஞா் அண்ணா நெசவாளா் சங்கத்தின் மாநில தலைவா் கலாம் விஜயன், 16 பெண்கள், 153 ஆண்கள் என, மொத்தம், 169 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.