ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
இரு சக்கர வாகனங்கள் மோதல்: 3 போ் காயம்
செல்லாத்தூா் கிராமம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 3 போ் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சஞ்சீவிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் நரசிம்மன் மகன் கிருஷ்ணா (45). இவா், புதன்கிழமை தனது நண்பா் சத்யா (32) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி சென்றபோது, செல்லாத்தூா் அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது.
இதில் கிருஷ்ணா, சத்யா மற்றும் மற்றொரு வாகனத்தில் வந்த ஐயப்பன் (46) என 3 போ் காயம் அடைந்தனா். இவா்களை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு சோளிங்கா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் கிருஷ்ணா, சத்யா ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.